--- --:--:-- --

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

3

ப்ரல் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. பல முறை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரமே ஆச்சரியமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிராமே இந்த ரூ.10 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

 

நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் தங்கம் விலையால் நகை என்பது சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே அமைந்து விட்டது.அந்த வகையில் கடைசியாக கடந்த (24.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,005க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,040க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இதையடுத்து தொடர்ந்து 4 நாட்களுக்கு தங்கம் விலை அதே விலையே நீடித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி இன்று (28.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 7,405க்கும், சவரனுக்கு ரூ. 440 குறைந்து ஒரு சவரன் ரூ. 59,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon