--- --:--:-- --

பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து நாளை மாலைக்குள் முடிவெடுக்கப்படும் – சி‌பி‌எஸ்‌இ

6

தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக நாளை மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்‌இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுப்பட்ட பொதுத்தேர்வுகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

 

கொரொனா பரவல் அதிகரித்து வரக்கூடிய சூழலில் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாக அமைந்துவிடும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது மனுக்களில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக புதன்கிழமை மாலைக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை ஜூன் 25ஆம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

 

இதனிடையே ஐசிஐசிஐ உள்ளிட்ட தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. மத்திய அரசு என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு தாங்கள் கட்டுப்படுவதாக ஐசிஎஸ்‌இ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை ஜூன் 25 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon