--- --:--:-- --

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

7

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2.516 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 1,380 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரொனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உள்ள நிலையில் மொத்தமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் 1,380 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில்146 பேருக்கு இன்று ஒரே நாளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டுள்ளது. மதுரையில் இன்று ஒரே நாளில் 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் 156 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 38 பேருக்கும், அதேபோல திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 41 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் 36 பேருக்கும், விருதுநகரில் 26 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது. கடலூரில் 28 பேருக்கும், தர்மபுரியில் 9 பேருக்கும், திண்டுக்கல்லில் 44 பேருக்கும் ஈரோட்டில் புதிதாக 5 நபர்களுக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 37 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 பேருக்கும் கரூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று பேருக்கும் கன்னியாகுமரியில் ஒன்பது பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon