மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் இருந்து வெளியாகும் வாயு..!
கோவா மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் லீக் ஏற்பட்டு பலத்த சத்தத்துடன் வாயு வெளியேறி வருகிறது. இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக கசிவு தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
குறிப்பாக 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து வந்து உள்ளது. வாயுவை கட்டுப்படுத்த தீயணைப்பு உயர் அதிகாரிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.






