அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை..!
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து, புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்தவகையில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து நாட்டில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் ஒன்றாம் தேதி நிர்ணயித்து வருகின்றன.
இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 4 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 1754 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை, தற்போது 1750 ரூபாயாக குறைந்துள்ளது. இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
எனினும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் ரூ.868.50 என்ற பழைய விலையிலேயே விற்கப்படுகிறது.





