4 மாவட்டங்களில் 12 நாட்களுக்கு மீண்டும் முழு பொதுமுடக்கம்..!
கொரொனா பரவலை கட்டுப்படுத்த நான்கு மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு பொது முடக்கம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகை கடைகள் ,பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தேனீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது. ஜூன் 21 மற்றும் 28 ஆகிய இரு ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த தளர்வும் என்று பொதுமுடக்கம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.







