கோடிக்கணக்கில் மோசடி : சென்னை கே.எஃப்.ஜே. ஜூவல்லரியை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
சென்னை கே.எஃப்.ஜே. நகைகடையில் சீட்டு பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் பணத்தைத் திருப்பித் தரக் கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மைலாப்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் கே.எஃப்.ஜே. ஜுவல்லர்ஸ் கிளைகளை அமைத்து நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு விளம்பர முறைகேடு விவகாரத்தில் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நகை கடையின் உரிமையாளர் சுனிலை விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து நகைச் சீட்டு பணம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட கிளைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முதிர்வு தொகை முடிந்து பல மாதங்களாகியும் பணத்தை திருப்பித் தரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.





