--- --:--:-- --

பெண்களை கர்ப்பமாக செய்தால் ரூ.13 லட்சம் எனக் கூறி மோசடி..!

7

பெண்களை கருத்தரிக்க வைத்தால் 13 லட்சம் ரூபாய் வரை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தில் பிரக்னண்ட் ஜாப் ஏஜென்சி என்ற நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என விளம்பரம் வெளியானது.

 

799 ரூபாய் செலுத்தி பதிவு செய்பவருக்கு கர்ப்பம் தரிக்க முடியாத நிலையில் உள்ள பெண்களை கருத்தரிக்க வைக்க வாய்ப்பு தரப்படும் என்றும் கர்ப்பமடைய செய்தால் அந்த ஆளுக்கு 13 லட்சம் ரூபாயும், கர்ப்பமாகாவிட்டால் ஆறுதல் தொகையாக 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

இதை பார்த்து நிறுவனத்தில் பணம் செலுத்தியதாகவும் ஆனால் பல நாட்களுக்கு பின்பும் அந்த நிறுவனம் கூறியபடி வாய்ப்பு தரவில்லை என்றும் போலீசில் பலர் புகார் செய்தனர். இதன்பெரில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நிறுவனத்தில் சோதனை நடத்தி எட்டு பேரை கைது செய்தனர்.

 

Right Menu Icon