புகார் கொடுத்த கடை ஊழியர் கொலை..!
ரவுடி மீது புகாரளித்த மெடிக்கல் கடை ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடி கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வந்த வினோத்குமார். அங்கு 10 ஆண்டுகளாக மருந்தகம் நடத்தி வந்தார்.
இலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வினோத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் போட்டேரி பகுதியை சேர்ந்த சிலம்பரசன் கொலை செய்தது தெரிய வந்தது. முன்னதாக மூன்று ஆண்டுகளுக்கு முன் வினோத்திடம் ரவுடி சிலம்பரசன் 50,000 பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் வினோத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் எதிரொலியால் கைது செய்யப்பட்ட சிலம்பரசன் முன் பகையால் திட்டம் தீட்டி தன் கூட்டாளிகளுடன் வினோத்தை கொலை செய்தது தெரிய வந்தது.





