--- --:--:-- --

திருச்சியில் டன் கணக்கில் அரிசி வாங்கி மோசடி..!

14

திருச்சி வியாபாரியிடம் ஆன்லைனில் இருபத்தி ஒரு டன் அரிசி வாங்கி மோசடியில் ஈடுபட்ட கோவை இளைஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டான்.

 

திருச்சியை சேர்ந்த முஹம்மது தமீம் அன்சாரியிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த அஷ்ரஃப் மற்றும் சலீம் ஆகியோர் இணையம் வழியாக ஆர்டர் செய்து முன் பணம் ஏதும் தராமல் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருபத்தி ஒரு டன் அரிசி வாங்கியுள்ளனர்.

 

இந்த நிலையில் அஷ்ரஃப் பணம் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தவுடன் முகமது தமிமுன் அன்சாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முகமது தமிமுன் அன்சாரி அளித்த புகாரையடுத்து போலிசார் அஷரபை கைது செய்ததுடன் மற்றொரு குற்றவாளியான சலீமை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon