சீனாவில் நான்காவது அலை..! முழு ஊரடங்கு அறிவிப்பு..!
கொரோனா நான்காவது அலை ஜூன் மாதம் பரவ தொடங்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது சீனாவில் ஜங்சன் பகுதியில் புதிய வைரஸ் பரவல் காரணமாகவும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வூகான் நகரில் 2019ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரொனா வைரஸ் உலக நாடுகளில் பரவி தற்பொழுது வரை பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரொனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததை தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சீனாவின் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் புதிய வைரஸ் மக்களுக்கு பரவி வருகிறது.
இதையடுத்து ஜங்சன் பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நான்காவது மாதம் 22ஆம் நாள் தொடங்கி அக்டோபர் மாதம் 24ஆம் நாள் வரை பரவிக் கொண்டிருக்கும் எனவும் ஆகஸ்ட் மாதத்தில் தொற்று தீவிரம் அதிகரிக்கும் எனவும் கான்பூர் ஐஐடி ஆய்வு கூடம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






