--- --:--:-- --

திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் ஒருவர் உயிரிழப்பு..!

2

காஷ்மீரின் குரேசெக்டார் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு வீரர் ஒருவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ அவசரம் காரணமாக அவரை மீட்க சீட்டா ரக ஹெலிகாப்டர் சென்றுள்ளது.

 

அந்த ஹெலிகாப்டர் பனிமூட்டம் நிறைந்த பகுதியில் சென்ற போது திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் பயணித்த வேளையில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon