--- --:--:-- --

முன்னாள் சட்டமன்ற எம்எல்ஏ ஆர்.சுந்தர்ராஜன் உயிரிழப்பு..!

3

மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான ஆர் சுந்தர்ராஜன் உடல்நலக் குறைவால் காலமானார். தேமுதிக சார்பில் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு ஆர் சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார்.

 

பின்னாளில் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிமுகவில் இணைந்தனர்.

 

அவர்களில் ஆர் சுந்தர்ராஜன் ஒருவர். தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சிறு வயது முதலே நெருங்கிய நண்பராக இருந்த இவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 11 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon