அதிமுக முன்னாள் MLA துரை.அன்பரசன் காலமானார்!
அதிமுக EX MLA துரை.அன்பரசன் (85) வயது மூப்பு காரணமாக காலமானார். எம்ஜிஆர், ஜெ., உள்ளிட்டோரின் அன்பை பெற்ற அவர், 1984 1987 வரை நெல்லிக்குப்பம் எம்எல்ஏவாக இருந்தார்.
தென்னாற்காடு மாவட்ட அதிமுக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது உடலுக்கு அதிமுகவினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது உடல் பெண்ணையாற்று மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.





