கோவை மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி.கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் !!!
கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட எட்டிமடையை ஒட்டியுள்ள விநாயகர் கோவில் வீதியில் வசித்து வருபவர் மொய்தீன்.இவரது வீட்டில் 4 ஆடுகள் சிறுத்தை தாக்கி இரண்டு ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது.
இது குறித்து அறிந்த வனத்துறையினர் இறந்த ஆடுகளை மதுக்கரை கால்நடை மருத்துவர் ராம்நாத் அவர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுத்தை தாக்கி உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டது.இதனையடுத்து இச்சம்பவம் குறித்து மதுக்கரை வனத்துறையினர் குழு அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை இரு தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்படி சிறுத்தையை பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தொடர்ந்து மதுக்கரை வனச்சரகர் ஸ்ரீநிவாசன் தலைமையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு சிறுத்தையை பிடித்து அடர் வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






