மீனவர்கள் வலையில் சிக்கிய பறக்கும் மீன்..!
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடலில் தென்பட்ட அரிய வகை பறக்கும் மீன் மீனவர்கள் வலையில் சிக்கிய நிலையில் மீண்டும் கடலில் விடப்பட்டது. பறக்கும் மீன் துடுப்புகள் பறவைகள் போன்று பெரிதாக இருக்கும்.
இதனால் கடலின் மேற்பரப்பில் தனது இறக்கைகள் போன்று இருப்பதை பயன்படுத்தி பறக்கவும் முடியும். இந்த நிலையில் மன்னார் வளைகுடா, நாட்டுப் படகில் சென்ற மீனவர்களின் வலையில் ஒரு பறக்கும்மீன் சிக்கியுள்ளது. இந்த மீனை மீனவர்கள் மீண்டும் கடலிலேயே விட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





