சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகன ஓட்டி பலி..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகன ஓட்டி பேருந்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலனியை சேர்ந்த குமாரசாமி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே ஓடியது.
திடீரென்று பிரேக் பிடித்தால் நிலை தடுமாறி கீழே விழுந்த குமாரசாமி மீது பேருந்து ஏறியதில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.





