--- --:--:-- --

சூறைக்காற்று எதிரொலியாக கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை..!

3

ங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குளச்சல் துறைமுகங்களை சேர்ந்த 8000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்ல படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் மூன்றாம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் மண்டபம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

 

இதனால் சுமார் இரண்டு லட்சம் மீனவர்களும், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர். இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு ஏழு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon