மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகைக்கால போனஸ்..!
மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகைக்கால போனஸ் வழங்க டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
30 லட்சத்து 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 ஆயிரத்து 737 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இத்தொகை இன்னும் ஒரு வாரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் இத்தொகை பொருட்கள் வாங்க செலவிடப்படுவது மூலம் பொருளாதாரம் ஊக்கம் தரும் என்றும் தெரிவித்தார்.






