ரூ.43 லட்சத்தை சுருட்டிய பெண் காவல் ஆய்வாளர்..!
மதுரையில் கணவன் – மனைவி தகராறில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வரதட்சனையில் நகை 95 பவுனை அடகு வைத்த பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஐடி ஊழியரமான ராஜேஷ் என்பவர் மீது அவரது மனைவி புகார் அளித்ததை தொடர்ந்து திருமணத்தின் பொழுது தான் வரதட்சணையாக வாங்கிய நகையை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைத்தார்.
ஆனாலும் அந்த நகையை காவல் ஆய்வாளர் கீதா பெண் வீட்டாரிடம் ஒப்படைக்காததோடு அதனை அடகு வைத்து நாற்பத்தி மூன்று லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுரை சரக டிஐஜி அலுவலகத்தில் ராஜேஷ் அளித்த புகாரில் விசாரணை நடத்தப்பட்டு காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





