சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு..!
பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு சீனாவை சேர்ந்த மேலும் 54 மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடைவிதித்துள்ளது. விவா வீடியோ எடிட்டர் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
டிக் டாக், வி ஷார்ட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடை விதித்திருந்தது. இதைதொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 18 இல் சில செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது மூன்றாவது கட்டமாக மேலும் 54 செயலிகள் தடை செய்யப்பட உள்ளன.
இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்று சில அமைப்புகள் மத்திய அரசிடம் கூறியிருந்தனர். இதனையடுத்து அந்த செயலிகளுக்கு அடிப்படையாக தடை விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் தங்கள் செயலிகளுக்கு தடை விதிக்கும் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.





