3 பெண் குழந்தைகள் கொடூர கொலை!
தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மூன்று கொலைகள் கொடூரமாக அரங்கேறியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வீடு கட்ட வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், மனைவி, மகனை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு, 9, 7, 3 வயதுடைய மூன்று மகள்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின், தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.





