--- --:--:-- --

மகளின் திருமணத்தை நடத்த முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட தந்தை..!

5

சென்னை வியாசர்பாடியில் கடன் தொல்லை அதிகரித்ததால் மகளின் திருமணத்தை நடத்த முடியாத விரக்தியில் துணி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எம்கேபி நகர் 14வது குறுக்கு தெருவை சேர்ந்த ஹரிஷ் சேர்ந்து என்பவர் பாலாஜி ரெடிமேட் என்ற பெயரில் துணி கடை நடத்தி வந்தார்.

 

இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் ஒரு மகளுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே துணிக்கடையில் போதிய வருமானம் இன்றி கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.

 

அவரின் இரண்டாவது மகளுக்கு திருமண ஏற்பாடு நடத்த போதிய பணம் இல்லாமல் மன உளைச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

Right Menu Icon