உசிலம்பட்டி தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து தந்தை, மகள் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தேநீர் கடையில் சிலிண்டர் வெடித்து தந்தை மகள் உயிரிழந்தனர். உசிலம்பட்டி அருகே கருப்பையா என்பவர் அதே ஊரில் உள்ள டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இன்று வழக்கம் போல் டீக்கடையில் இருந்த அவர், டீக்கடையில் இருந்த சிலிண்டர் வெடித்துள்ளது.
இதனால் சம்பவ இடத்திலேயே கருப்பையா மற்றும் பிரதீபா என்ற 5 வயது மகளும் மற்றொரு மகளும் தீயில் கருகி உள்ளனர். இதில் கருப்பையா மற்றும் பிரதீபா இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஹேமலதா என்ற மகளை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட தகராறில் இவர் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை முயற்சி உசிலம்பட்டி பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





