பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, சர்க்கரை உடன் மஞ்சளை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்..!
தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் மஞ்சளை கொள்முதல் செய்த பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சள் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 100 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விவசாயிகள் மற்றும் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மஞ்சள் சாகுபடியில் புழு தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மருந்துகள் அடித்தும் புழுக்களை கட்டுப்படுத்த முடியாததால் உரிய மருந்துகளை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, மற்றும் கருப்பு வழங்குவது போல மஞ்சளை கொள்முதல் செய்து வழங்கினால் விவசாயிகள் இழப்பை தடுக்க பெரு நிதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





