--- --:--:-- --

மதுரை ED அலுவலகத்தில் 13 மணி நேர சோதனை நிறைவு..!

2

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில், மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார்.

சினிமாவை மிஞ்சும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர், விரட்டி பிடித்து கைது செய்தனர். அதன் பிறகு, அங்கித் திவாரியை திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், அங்கித் திவாரி மீதான புகாரின் ஆதாரங்களை சமர்ப்பித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவரது அறையை மட்டும் சோதனையிட அனுமதி கோரினர். இதையடுத்து, அமலாக்கத்துறையினர் அனுமதி வழங்கியவுடன், அதிரடியாக உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அங்கித் திவாரியின் அறையை சோதனையிட்டனர்.

அதில் கிடைத்த முக்கிய தகவல்கள் என்ன என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரி எத்தனை பேரிடம் லஞ்சம் பெற்றார்? யாரிடம் மிரட்டலில் ஈடுபட்டார் என்ற தகவல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சத்தில் பங்கு அளிக்கப்பட்டதா? அங்கித் திவாரியின் வீடு , அவர் தொடர்புடைய இடங்களில் ஆவணங்களை சேகரித்து, அதன் பிறகு விசாரணையை தீவிரப்படுத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை எதிரொலியாக, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நிறுத்தப்பட்டனர். விதிமீறல்களில் ஈடுபடுவோரை சோதிக்கும் அதிகாரம் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரே கையூட்டு பெற்று, கையும் களவுமாக சிக்கியுள்ளது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon