--- --:--:-- --

விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட விவசாயி..!

2

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வாங்கிய கடனுக்கு 5 ஏக்கர் நிலத்தை அபகரித்ததால் விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

நாச்சிமுத்து என்ற அந்த விவசாயி கடந்த 2010ஆம் ஆண்டு தொழில் செய்வதற்காக தனது மூன்று ஏக்கர் 90 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து வேலு என்பவருக்கும் கடன் பெற்றுள்ளார். சில மாதங்களுக்கு முன் அந்த நிலத்தை நாச்சிமுத்துவிற்கு தெரியாமல் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

 

அது குறித்து கேட்க சென்ற போது மற்றொரு ஒரு ஏக்கர் 70 சென்ட் நிலத்தையும் மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாகவும் கூறப்படும் நிலையில் மன உளைச்சலில் இருந்த நாச்சிமுத்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Right Menu Icon