பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கானுக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து..!
பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கானும் அவரது மனைவி கிரண் ராவ்வும் விவாகரத்து செய்துள்ளதாக பரஸ்பரம் அறிவித்துள்ளனர். நடிகர் அமிர் கான் முதலில் நடிகை ரெய்னாவை திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் 2007 இல் விவாகரத்து செய்துவிட்டார். தான் நடித்த லகான் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் 15 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக அமீர்கான் அறிவித்துள்ளனர்.





