மனநலம் பாதித்த இளைஞரை குடும்பத்தினரே அடித்துக்கொலை! பக்கத்து வீட்டு பெண் அளித்த புகார்!
கொல்கத்தாவின் மொண்டாள் பேரா பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை அவருடைய குடும்பத்தினரே அடித்துக் கொலை செய்தனர். சம்பு நாத் என்பவரின் மூத்த மகன் பூனேந்தி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளான்.
இந்த நிலையில் பூனேந்தி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்ட பக்கத்துவீட்டு பெண் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கால் தவறி விழுந்ததாக அந்த கொலையை குடும்பத்தினர் மூடிமறைக்க முயற்சித்தனர். ஆனால் விசாரணையில் சொந்த குடும்பத்தினரே மனநலம் பாதிக்கப்பட்டவரை கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த கொலை தொடர்பாக அண்டைவீட்டார் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞரின் தாய், தந்தை மற்றும் அண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கொலை நடைபெற்ற அந்த வீட்டை அண்டைவீட்டார் அடித்து நொறுக்கிய தால் பரபரப்பு உண்டானது.






