--- --:--:-- --

சென்னையில் இருந்து வந்த பெண்ணை கொரொனா அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றிய குடும்பத்தினர்!

10

சென்னையில் இருந்து தேனி வந்த பெண்ணை கொரொனா அச்சம் காரணமாக அவருடைய குடும்பத்தினரே வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லி நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் உள்ள தன்னுடைய மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

 

இந்நிலையில் கொரொனா அச்சம் காரணமாக அந்த பெண்ணை வீட்டிற்குள் அனுமதிக்காமல் அவருடைய குடும்பத்தினரே வெளியேற்றியுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை எடுத்துக் கொண்ட அந்த பெண் பரிசோதனை முடிவுகள் வரும்வரை வீட்டிற்கு அருகே உள்ள மலைப் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு கொரொனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவரை தேடி சுகாதாரத்துறையினர் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பெண்ணை வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon