--- --:--:-- --

எதற்கும் தற்கொலை தீர்வாகாது எனக்கூறிய சிம்பு! சுஷாந்த் தனது நெருங்கிய நண்பன்!

9

எதற்கும் தற்கொலை என்பது தீர்வாகாது மன பலம் கொண்டு எந்த நிலையில் இருந்து எழுந்து நின்று விடலாம் என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். நடிகர்களான டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ஆகியோரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள சிலம்பரசன் தனது நெருங்கிய நண்பர்களான 3 பேரின் மறைவை சினிமாவுக்கான இழப்பாக பார்ப்பதாக கூறினார்.

 

சுஷாந்த் சிங் ராஜ்புட் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்றும் இறப்பு ஒரு கலைஞனின் வெற்றியை நிறுத்தி விடாது என்பதை உலகறியச் செய்ய திரையரங்கில் படம் வெளியாக வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மனதளவில் தளர்ந்து போக வேண்டாம் என்றும் எதற்கும் தற்கொலை தீர்வாகாது என்றும் எந்த நிலையில் இருந்தும் எழுந்து நின்று விடலாம், வெற்றிபெற்று விடலாம் என்பதை மனதில் இருந்து நீக்கி விட வேண்டாம் என்றும் சிலம்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon