போலி என்சிசி முகாமை நடத்தியவர் மரணம் சந்தேகத்திற்குரியது : ஈபிஎஸ்
போலி என்சிசி முகாம் விவகாரத்தில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையில் அவரது தந்தையும் இறந்தது குறித்து மக்களின் கேள்விகளுக்கு திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
போலி என்சிசி முகாம் விவகாரத்தில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரும் அவரது தந்தையும் இறந்தது குறித்து மக்களின் கேள்விகளுக்கு திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிவராமன் மற்றும் அவரது தந்தை ஆகியோரின் தொடர் மரணங்கள், அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை முக்கிய பள்ளிகளின் பெயர்களை சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற பொது மக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.





