--- --:--:-- --

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!

11

னியார் பள்ளிகளில் 40 சதவீத கல்வி கட்டணத்தை செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரொனா பொது முடக்கத்தை தொடர்ந்து தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

 

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கல்வி கட்டணத்தை தவணையாக பிரித்து வசூலிக்கலாம் என்று முதல் தவணையாக 40 சதவீத கட்டணத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வசூலிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் கல்வி கட்டணத்தை பெற்றோர் செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீதான நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 75 புகார்களில் 29 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து உத்தரவை மீறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை உடன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon