--- --:--:-- --

ஈரோட்டில் நடைபெற்ற விநோத சாணியடி திருவிழா

13

ஈரோடு மாவட்டம் தாளவாடி கும்பிட்டாபுரத்தில் ஒருவர் மீது ஒருவர் சாணி வீசி எறியும் வினோத வழிபாடு நடைபெற்றது. குமிட்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை அடுத்த மூன்றாவது நாள் சாணத்தை ஒருவர் மீது ஒருவர் வீசி எறியும் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

 

அதன்படி இந்த ஆண்டு ஊர் குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமி சிலை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் ஆண்கள் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசி மகிழ்ந்தனர். அதன்பின் குளத்தில் நீராடி சாமியை வழிபட்டனர்.

Leave a Reply

Right Menu Icon