அனைவருக்கும் தலைகுனிவு : ஸ்டாலின் வேதனை
கழிவுகளை அகற்றும் போது இறந்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது அனைவருக்கும் தலைகுனிவு என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மு.கஸ்டாலின் 1991 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் கழிவுகளை அகற்றும் போது 206 பேர் பலியானதாக வெளியாகியுள்ள தகவலை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் திமுக ஆட்சியும் அடங்கும் என தெரிவித்துள்ள ஸ்டாலின் இது சமூக அவலத்திற்கு அரசு மட்டுமில்லாது அனைவரும் சேர்ந்த முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்த கூடாது என்பதை திராவிட இயக்கக் கொள்கை என கூறியுள்ள ஸ்டாலின் இந்த தொழிலுக்காக நவீன கருவிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மனித மாண்பு பேணப்பட நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




