பேனாச்சின்னம் வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் யோசனை..!
ஸ்டாலின் எதிர்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சும் முதலமைச்சராக வந்த பிறகு ஒரு பேச்சும் பேசி வருகிறார் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் திமுக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்றும் இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் கூறினார். பாஜக உடனான கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடலில் பேனா சின்னம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தரையில் அமைக்கலாம் எனவும் கூறிய பழனிசாமி கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.





