சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிவிக்கையில் மாற்றம் வேண்டும்..!
சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிவிக்கையில் தேவையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
புதிய வரைவு அறிக்கையில் தொழிற்சாலைகளில் வகைப்பாடு மாற்றம், மக்கள் கருத்தை பதிவு கால நாட்களில் குறைப்பது, அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்து இருப்பதாக நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வரைவு அறிக்கையில் பல முக்கியத் திட்டங்களை மக்கள் கருத்து கேட்டு பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம் என்ற அம்சமும் மக்கள் மனதில் அவ நம்பிக்கையையும், அச்சத்தையும் உண்டாக்குவதாக நடிகர் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.
கொரொனாவில் இருந்து மீள நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு 2020 வரைவு அறிவிக்கையை எதற்காக இவ்வளவு அவசரமாக கொண்டு வர வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரைவு அறிவிக்கையில் தேவையான மாற்றங்களை மத்திய அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும் நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார்.







