--- --:--:-- --

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட பணியாளர் பவன்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

14

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டதை அடுத்து பொதுமக்கள் ஏராளமானவர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திகார் சிறையில் வெளியே கூடியிருந்த பொதுமக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட்ட பணியாளருக்கு எண்பதாயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.

 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்ற நியமிக்கப்பட்டவர் ஆவார். மீரட்டில் இருந்து பலத்த பாதுகாப்புக்கு இடையே பவன் திகார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சிறையில் அவருக்கு தனி அறை ஒதுக்கப் பட்டிருந்தது. சிறையில் இருந்தவாறு குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை செய்தார்.

 

இன்று அதிகாலை தனியறையில் இருந்து அழைத்துவரப்பட்ட பவனிடம் கயிறுகளையும் சிறைத்துறை அதிகாரிகள் வழங்கினர். அதில் நான்கு கயிறுகளை தேர்ந்தெடுத்த பவன் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றினார். தூக்கிலிட்ட பவனுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் என 80 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.

 

மேலும் தூக்கிலிடும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon