புதுச்சேரி – விழுப்புரம் இடையே மின்சார ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து..!
புதுச்சேரி – விழுப்புரம் இடையிலான மின்சார அறையில் சேவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே அளித்த செய்தி குறிப்பில் திருச்சி கூட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்றும் அதன்படி விழுப்புரம் இருந்து புதுச்சேரி செல்லும் மின்சார ரயிலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் மின்சார ரயிலும் வருகிற 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் முன்பதிவு எல்லா சிறப்பு ரயில் வருகிற 6ம் தேதியும் திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் வரும் முன்பதிவு சிறப்பு ரயில் 7ம் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல் சில ரயில்கள் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.





