--- --:--:-- --

வரும் 7ஆம் தேதி முதல் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு..!

7

பெண் பயணிகளின் பயண நேரத்தை அதிகரிக்கும் வகையில் வரும் 7ஆம் தேதி முதல் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களுக்காக சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, மார்க்கெட், அரக்கோணம், கும்மிடிப் பூண்டி, வேளச்சேரி கடற்கரை உள்ளிட்ட வழித்தடங்களில் 244 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இதனை தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர்களும் மின்சார ரயில்களில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்களும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் மின்சார ரயிலில் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதித்தது.

 

இந்நிலையில் அத்தியாவசிய பயனாளர்கள் பட்டியலில் வராத பெண் பயணிகள் கூடுதல் நேரங்களில் மின்சார ரயில்களில் பயணிக்க ஏதுவாக மின்சார ரயில் சேவை 320 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon