புதிய செயலியை தொடங்கி வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!
தமிழகம் மின்விசை நிதி மற்றும் அதன் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் கைபேசி செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வைபீட்டாளர்களின் நலனுக்காக அதன் செயல்பாடுகளை ஆன்லைன் மூலம் பெற டிஎன் பவர் பைனான்ஸ் இணையதளம் மற்றும் டிஎன்பிஎஃப்சிஎல் என்ற கைபேசி செயலி சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய வலைதளத்தின் மூலம் வைப்பீட்டாளர்கள் வைப்பீட்டு கணக்கைத் தொடங்குதல், புதுப்பித்தல், முதிர்வடைந்த வைப்பீட்டு தொகையை பெறுதல், கடன் பெறுதல் உள்ளிட்ட பணிகளை பெற முடியும்.







