ட்யூட்டி டைம் ஓவர்..விமானத்தை எடுக்க முடியாது எனக்கூறி இறங்கிய விமானி..!
பணி நேரம் முடிந்ததால் விமானி விமானத்தை இயக்க மறுப்பு தெரிவித்ததால் பயணிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புனேவிலிருந்து பெங்களூரு செல்ல இண்டிகோ விமானம் பயணிகளுடன் தயாராக இருந்தது.
5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். இதனிடையே விமான நேரத்திற்கு நேர கட்டுப்பாட்டு அலுவலகத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. indico நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.






