தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்..!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரி கடல் பகுதி வரை நீடிப்பதால் தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.
தென்னிந்தியப் பகுதியில் வருகின்ற 19ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







