--- --:--:-- --

என் சாவுக்கு குடிப்பழக்கமே காரணம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய போலீஸ்..!

6

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கர்குளம் பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகன் அழகுராஜ். 33 வயதான இவர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

 

இவருக்கு பிரியா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். அழகுராஜுக்கு கடந்த ஒரு வருட காலமாக குடிப்பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. அவரை திருப்பூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து பின்னர் பணிக்கு வந்தவர் கடந்த 12ஆம் தேதி விடுமுறையில் நிலக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாய் வெள்ளையம்மாள் ரேஷன் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும் பொழுது அழகுராஜ் வீட்டின் பூஜை அறையில் வேஷ்டியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

அழகுராஜின் கையில் இருந்த இரண்டு காகிதங்களை தனது இறப்பிற்கு குடிப்பழக்கம் தான் காரணம் என்றும் வேறு யாரும் காரணம் இல்லை எனவும் எழுதி வைத்துள்ளார்.

 

Right Menu Icon