போதைப்பொருள் வழக்கு – ஜாஃபர் சாதிக்கிற்கு ஜாமின்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்குக்கு ஜாமின் வழங்கி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் திங்கட்கிழமை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தும், செயல்பாட்டில் இருக்கும் செல்போன் எண் மற்றும் பாஸ்போர்டை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜாமின் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதாகி உள்ளதால் ஜாஃபர் சாதிக் சிறையில் தான் இருப்பார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




