வீடு இல்லாமல் பஸ்டாண்டில் வாழ்ந்த தம்பதி..நேர்ந்த கொடூரம்..!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தங்கி துடைப்பம் பெற்று வந்த மூதாட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலூர் அருகே உள்ள கட்சி ராயன்பட்டி கிராமத்தில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.
வயதான தம்பதி பேருந்து நிறுத்தத்தில் தங்கி தென்னை விலக்குமாரு விற்று வியாபாரம் செய்து வந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இருவரையும் மர்ம நபர்கள் அறிவாளால் விட்டுவிட்டு தப்பியோடியுடனர். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மூதாட்டியின் கணவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் மோப்பனாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





