--- --:--:-- --

மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கணவன் செய்த அதிர்ச்சி செயல்..!

8

புதுச்சேரியில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுச்சேரி வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் – இந்துமதி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

 

மனைவி நடத்தை மீது சந்தேகம் அடைந்த விக்னேஸ்வரன் அவருடன் அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளான். இதனால் விக்னேஸ்வரனை அவரது உறவினர்கள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று மனநல சிகிச்சை அளித்துள்ளனர்.

 

இதனிடையே வழக்கம் போல பிள்ளைகள் பள்ளி சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த இந்துமதியிடம் விக்னேஸ்வரன் தகராறு செய்துள்ளான். அப்பொழுது ஆந்திரமடைந்த அவர் கத்தியால் இந்துமதியின் கழுத்தை அறுத்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

பின்னர் மனைவியை கொலை செய்த விக்னேஸ்வரன் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon