--- --:--:-- --

கொரொனாவில் சிக்கித் தவிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும்!

7

டெல்லியில் கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும், செவிலியர்களும் கூட நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனாவுக்கு எதிரான போரில் முன் களத்தில் நின்று போராடும் வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர் களுக்கும் தற்போது நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

குறிப்பாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ், டாக்டர் அம்பேத்கர் மருத்துவமனை , மேக்ஸ் மருத்துவமனை, இந்து ராவ், பாபு ஜெகஜீவன்ராம் 5 மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நோய்த்தொற்று தற்போது கண்டறியப்பட்டு இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதில் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆண் செவிலியர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 40 மருத்துவப் பணியாளர்களும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இதேபோல் இரைப்பை குடல் பிரிவில் பணியாற்றி வந்த 30 வயது ஆண் செவிலியருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

அடுத்ததாக பிரபல தனியார் மருத்துவமனையான மேக்ஸ் இல் பணிபுரியும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 33 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் காணும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

 

பாபாசாகிப் அம்பேத்கர் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், பிற ஊழியர்கள் என 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள பாபு ஜெகஜீவன்ராம் மருத்துவமனையில் 44 ஊழியர்களுக்கும் வடக்கு டெல்லியில் உள்ள இந்துராவ் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் வெற்றி உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon