--- --:--:-- --

2022 ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமா?

2

கொரொனாவுக்கு உடனடியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் 2022ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியிருக்கும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் பரவாமல் இருக்க தனிமனித இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றன.

 

இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந் நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழக பொதுசுகாதார பள்ளி நடத்திய ஆய்வின் முடிவுகள் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன. அதில் கொரொனாவை தடுக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தனிமனித இடைவெளி ஒன்று தான் கொரொனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு என கூறப்பட்டுள்ளது.

 

கடந்த 2003 ஆம் ஆண்டு சிறிய அளவில் தலைதூக்கிய சார்ஸ் வைரஸ் சிறிய இடைவெளிக்குப்பின் மிகவும் பெரிதாக வெடித்தது குறிப்பிட்டுள்ளது. கொரொனாவும் அதுபோல மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். சீனாவையே அவர்கள் உதாரணமாக கூறியுள்ளனர். ஒவ்வொரு குளிர்காலத்தில் கொரொனா தலை தூக்க வாய்ப்புள்ளதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.

 

மருந்து கண்டறியும் வரை அதாவது 2022ஆம் ஆண்டு வரையிலாவது தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரொனாவிடமிருந்து மனிதனை காக்க முடியும் என்றும் குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon