--- --:--:-- --

இளைஞரை ஆபாசமாக திட்டிய திமுக பிரமுகர்..அதிரடி நடவடிக்கை எடுத்த திமுக..!

4

சேலத்தில் பட்டியல் இளைஞரை ஊர் மக்கள் மத்தியில் இருக்க வைத்து ஆபாசமாக திட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திருமலை இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயிலுக்கு சென்றதற்காக பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் ஊர் மக்கள் முன்னிலையில் ஆபாசமாக திட்டி உள்ளார்.

 

அவர் இளைஞரை திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து ஆபாசமாக திட்டிய திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon